புது சட்டை , புது டிராயர்
கையில் புத்தகப்பை
தூரத்தில் மணியோசை
சட்டென்று ஒரு கை
எழுந்திரு ! மணியடித்துவிட்டது
மில்லுக்கு போகணும் .........
பள்ளிகனவு பாதியாய் போனதில்
ஏங்கி அழும் சிறுவன் .....